கோவை ஜூன் 20 திருப்பூர் மாவட்டம் பல்லடம் பக்கம் உள்ள ஆர் .எம் . நகர் ,டி கே டி மில் , குன்னாங்கல் பாளையம் பகுதிகளில் சட்டவிரோதமாக வங்க தேசத்தினர் தங்கி இருப்பதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு போலி அடையாள அட்டைகளை பயன்படுத்தி வங்கதேசத்தினர் 26 பேர் அங்குள்ள பல்வேறு நிறுவனங்களில் தங்கி பணிபுரிந்தது தெரியவந்தது .இதை யடுத்து அவர்கள் அனைவரும்கைது செய்யப்பட்டனர்.அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
