தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு, நீலகிரி கிழக்கு உதகை நகர கழகத்தின் சார்பில் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி உற்சாகம்,

நீலகிரி மாவட்டம் முழுவதிலும்
தமிழக வெற்றி கழக தலைவர் தளபதி விஜய் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு
அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்களின் வழிகாட்டலில்படி நீலகிரி மாவட்ட நகர சார்பில் அனைத்து நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன, நீலகிரி மாவட்ட கிழக்கு நகர செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் கழகத் தலைவர் தளபதி விஜய் அவர்களின் 51 வது பிறந்தநாளை முன்னிட்டு உதகை மாரியம்மன் கோவிலில் 7 மணியிலிருந்து 8:00 மணி வரை சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து 9 மணிக்கு நீலகிரி மாவட்ட தமிழக வெற்றி கழக கிழக்கு நகர புதிய அலுவலகம் உதகை மெயின் பஜார் பகுதியில் அமைக்கப்பட்டதை
மாவட்ட கிழக்கு நகர செயலாளர் ஜெயக்குமார் நீலகிரி மாவட்ட செயலாளர் பாமா ரமேஷ் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர், கழக நிர்வாகிகளுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன, விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் உதகை கிழக்கு நகர கழக செயலாளர் ஜெயக்குமார் வரவேற்று பேசினார், நடைபெற்ற நிகழ்ச்சியில், உதகை நகர கழக இணைச் செயலாளர் ஸ்டான்லி, பொருளாளர் ரவிக்குமார், துணைச் பொருளாளர் கண்ணன், நித்தியா, மற்றும் உதகை கிழக்கு நகர மகளிர் அணியினர் ஜெசிந்தா, ஜே நித்யா, மற்றும் கிழக்கு நகர செயற்குழு உறுப்பினர்கள் முரளி, மணி, நந்து, அருண், அபுதாயர், ஆகியோர் முன்னிலையில் புதிதாக திறக்கப்பட்ட உதகை நகர கழக அலுவலகத்தில் வருகை தந்த கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் 300க்கும் மேலான அனைவருக்கும் லட்டு வழங்கப்பட்டது, நிகழ்ச்சி தொடர்ச்சியாக தளபதி விஜய் அவர்களின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு 50க்கும் மேலான தம்பதியர்களுக்கு மாவட்ட செயலாளர் பாமா ரமேஷ், உதகை நகர செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் இணைந்து வேட்டி சாலைகளை வழங்கினர், மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட நிர்வாகிகள் கணேஷ், ராஜேஷ், பஷீர்,ஆனந்த், பரத், மற்றும் மகளிர் அணியினர், தீனா, ஐடி விங்க் கார்த்திக், நீலகிரி கிழக்கு மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் வினோத், துணைத் தலைவர் சந்தோஷ், பொருளாளர் அக்கீம், நகர அமைப்பாளர் ஜே எஸ் கார்த்திக், இளம் பெண்கள் நகர அமைப்பாளர்கள் பிரியதர்ஷினி, துணை அமைப்பாளர் ரெஜினா, செல்வி, லுவிசா, பொருளாளர் ஆர்த்தி, ஷாலினி, நித்தியா, நபிலா, ஆகியோர் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பு, செய்தனர், புதிதாக திறக்கப்பட்ட நகர அலுவலகத்தில் 250 க்கும் மேலான உறுப்பினர்கள் தமிழக வெற்றிக்கழக கிழக்கு நகர கழகத்தில் இணைய உள்ளார்கள் என்பதை நகர செயலாளர் ஜெயக்குமார் தெரிவித்தார், நடைபெற்ற விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வருகை தந்த நீலகிரி மாவட்ட கிழக்கு செயலாளர் பாமா ரமேஷ் சிறப்புரையாற்றி நல் ஆலோசனைகள் வழங்கி, கழகத்தின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒன்றிணை வேண்டும் என்பதை வலியுறுத்தி கூறி பேசினார், மற்றும் நிகழ்ச்சியில் நகர செயலாளர் ஜெயக்குமார் சிறப்புரையில் கூறியதாவது கழகத்தின் வளர்ச்சி பணிகளை தொடர்ந்து செய்து வருவதையும், நீலகிரி மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் உயர்ந்து வருவதை பாராட்டி கழகத்தில் உள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்தார், மற்றும் தளபதி விஜய் அவர்களின் 51 வது பிறந்தநாளை நாம் அனைவரும் குடும்பமாக இன்று கொண்டாடியதற்கு நன்றி தெரிவித்தார், தொடர்ந்து உதகை தொட்டணி கிராமத்தில் தமிழக வெற்றிக்கழக கிழக்கு நகர சார்பில் நகர செயலாளர் ஜெயக்குமார் தலைமையில், நிர்வாகிகள் ஸ்டான்லி, முரளி, ரவி, நந்து, மணி, கண்ணன், சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் தொட்டணி கிராமத்தில் வாழும் 350 க்கும் மேற்பட்ட மக்களுடன் இணைந்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அவர்களின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி அங்கு வந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன, நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்பகுதியில் உள்ள 300க்கும் மேலான மக்கள் கலந்துகொண்டு தங்கள் பகுதியில் உள்ள அடிப்படை வசதிகளின் குறைகளை நகர கழக செயலாளர் ஜெயக்குமார் மற்றும் நகர நிர்வாகிகள் மத்தியில் எடுத்துக் கூறினார்கள், தமிழக வெற்றிக் கழக தலைவரும் தளபதி விஜய் அவர்களிடம் எடுத்துக் கூறி இதற்கான தீர்வை பகுதி மக்களுக்கு கண்டிப்பாக செய்து தருவோம் என்று உறுதி அளித்து வந்துள்ளனர்,