கோவிலில் புகுந்து சாமிசிலை திருட்டு.பெண் உட்பட 2 பேர் கைது

கோவை ஜூலை 2 கோவை அருகே உள்ள துடியலூரில் இருந்து ரயில் நிலையம் செல்லும் ரோட்டில் விநாயகர் கோவில் உள்ளது. இந்து கோவிலின் அருகே அரச மரத்தடி விநாயகர் கோவில் உள்ளது .அதன் பின்புறம் அரவான் கோவிலும் உள்ளது. இந்த அரச மரத்தடி விநாயகர் கோவிலில் பின்புறத்தில் 3 அடி உயரத்துக்கு பீடம் கட்டப்பட்டு அதில் ஒரு அடிக்கு சிவலிங்கம் சிலை இருந்தது. நேற்று அதிலிருந்த ஒரு அடி உயரம் கொண்ட சிவலிங்கம் சிலை உடைக்கப்பட்டு அந்த சிலையை யாரோ திருடி சென்று விட்டனர். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இந்து அமைப்பு நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர் .இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல் பரவியது. இது குறித்து தகவல் அறிந்த இந்து அமைப்பினர் கோவில் முன் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே துடியலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர் இதில் சிவலிங்கம் சிலையை உடைத்து திருடியது யார்? என்பது தெரியவந்தது. விசாரணையில் வெள்ள கிணறு ரோடு ரோடு, லவ்லி நகரை சேர்ந்த சதீஷ் குமார் (வயது 37) செட்டி வீதி, அய்யப்பா நகர், கோவிந்தசாமி லே – அவுட்டை சேர்ந்த மேரி (வயது 41)ஆகியோர் சேர்ந்து அந்த சிலையை உடைத்து வீட்டுக்கு எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதை யடுத்து அவர்களைபோலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில் சிவலிங்கம் சிலையை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என்று கூறியதால் அதை உடைத்துச் சென்றதாக தெரிவித்தனர். இதை தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.