2பைக்குகள் நேருக்கு நேர்மோதல் : முதியவர் சாவு

கோவை ஜூலை 2 கோவை அருகே உள்ள சூலூர் எஸ். ஆர். எஸ். நகரை சேர்ந்தவர் நாகராஜ் ( வயது 63) இவர் நேற்றுஅங்குள்ள ஏ ஜி. புதூர் -,ராவுத்தூர் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார் .ஐ.ஓ.சி. அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த மற்றொரு பைக்கும் இவரது பைக்கும் மோதிக்கொண்டன. இதில் நாகராஜ் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நாகராஜ் இறந்தார் இது குறித்து அவரது மனைவி லட்சுமி கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜேஷ் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக மற்றொரு பைக் ஓட்டி வந்த கார்த்திக் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.