பாத்ரூமில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்தவர் கைது.

கோவை ஜூலை 2 கோவை தெற்கு உக்கடம், ஜி.எம். நகரை சேர்ந்தவர் சுந்தரம் என்ற செல்வம் (வயது 51) இவரது வீட்டில் மதுபாட்டில் களை ப துக்கி வைத்து விற்பனை செய்வதாக கடைவீதி காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பாத்ரூமில் 26 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக சுந்தரம் கைது செய்யப்பட்டார்.