பி.ஏ.பி .வாய்க்காலில் குதித்து பெண் தற்கொலை

.கோவை ஜூலை 3 திருப்பூர் மாவட்டம் உடுமலை , பெதப்பம்பட்டிபக்கம் உள்ள சோமவாரப்பட்டியைச் சேர்ந்தவர்செல்வராஜ். இவரது மனைவி ராணி (வயது 52)இவர் நீரழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனம் உடைந்து நேற்று அங்குள்ள மாலப்பாளையம் பி.ஏ.பி.வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த அவரது கணவர் செல்வராஜ் சுல்தான் பேட்டை போலீசில் புகார் செய்தார் .போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.