பட்டப் பகலில் வீட்டில் பூட்டை உடைத்து 12 பவுன் நகை -வெள்ளி சாமான் கொள்ளை

கோவை ஜூலை 3 கோவை பீளமேடு, பெரியார் நகரை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் ராஜேஸ்வரன் (வயது 26 )நேற்று முன்தினம் இவரும் இவரது மனைவியும் வேலைக்கு சென்று விட்டனர். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் மணிகண்டன் என்பவர் ராஜேஸ்வரனுக்கு செல்போனில் தகவல் கொடுத்து அவரதுவீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார் .இதையடுத்து ராஜேஸ்வரன் வந்து பார்த்தபோது வீட்டில் பீரோவில் இருந்த 12 பவுன் தங்க நகைகள், வெள்ளி சாமான்கள் கொள்ளை யடிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து ராஜேஸ்வரன் பீளமேடு போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் அருள்பெருமாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.