வியாபாரிகளிடம் ரூ.35 லட்சம் மோசடி. பிஸ்கட் கம்பெனிஊழியர் மீது புகார்.

கோவை சுங்கம் பைப்பாஸ் ரோடு பாரி நகரை சேர்ந்தவர் சங்கர் (43). இவர் பிரபலமான பிஸ்கட்டை கடைகளுக்கு வினிநோகம் செய்யும் கம்பெனி நடத்தி வருகிறார். இவரிடம் கோவையை சேர்ந்த முருகன் (38) என்பவர் விற்பனை யாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 6 மாதமாக கடைகளுக்கு வினிநோகிக்கப்பட்ட பிஸ்கட்டுகளுக்கு பணம் வரமால் இருந்துள்ளது. இதனால் சங்கர் தான் பிஸ்கட் வினிநோகம் செய்த வியாபாரிகளுக்கு போன் செய்து பணத்தை கேட்டார். அப்போது அனைவரும் சேல்ஸ்மேன் முருகனிடம் பணத்தை கொடுத்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சங்கர் கம்பெனியின் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்தார். அதில் ரூ.35 லட்சம் முருகன் வாங்கி வரவு வைக்காமல் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதுகுறித்து சங்கர், முருகனை அழைத்து விசாரித்தார். அப்போது அவர் முன்னுக்கு முரணாக பதில் அளித்துள்ளார். அதன் பின்னர் முருகன் வேலைக்கு வராமல் இருந்து வந்தார். இதையடுத்து சங்கர் மோசடி குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் முருகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.