வீடு புகுந்து பணம் திருடிய திருடனை மடக்கி பிடித்த வாலிபர்.

கோவை அசோக் நகர் செட்டி வீதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் (36). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று அதிகாலையில் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது அறையில் இருந்த பீரோ திறக்கும் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தார். அதில் பீரோவின் அருகில் திருடன் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் சத்தம் போட்டு திருடனை பிடிக்க முயற்சி செய்தார். ஆனால் திருடன் வீட்டில் இருந்து ஓட்டம் பிடித்தார். ஸ்ரீராம் திருடனை விடாமல் துரத்தி சென்று மடக்கி பிடித்தார். திருடனை சோதனை செய்த போது அவர் பீரோவில் இருந்து ரூ.20 ஆயிரம் மற்றும் ஒரு வாட்ச் ஆகியவற்றை திருடி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஸ்ரீராம் திருடனை செல்வபுரம் போலீசில் ஒப்படைத்தார். போலீஸ் விசாரணையில் திருடன் செட்டி வீதி சாவித்திரி நகரை சேர்ந்த ராகுல் (23) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் ஸ்ரீராம் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ராகுலை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.