டாஸ்மாக் கடை அருகேகள்ள சந்தையில் மது விற்ற 2 பேர் கைது

.275 பாட்டில் பறிமுதல் .கோவை ஜூலை. 7 கோவை ஆர் .எஸ் . புரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் முத்து, கனகராஜ் ஆகியோர் தடாகம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை எண் ( 15 81) அருகே நேற்று நள்ளிரவில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது டாஸ்மாக் கடை மூடிய பிறகு மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில்அதிக விலைக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலை சேர்ந்த காளிதாஸ் ( வயது 32) தீயூரை சேர்ந்த சீமான் ராஜ் ( வயது29 )ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மறைத்து வைத்திருந்த 55லிட்டர் கொள்ளளவு கொண்ட 250 மது பாட்டில்களும்,மது விற்ற பணம் ரூ. 1 ,340 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.