கோயமுத்தூர் வருகைதந்த அ ம மு க பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு உற்சாக வரவேற்பு

கோயமுத்தூர் சூலூர் பகுதியில் அ ம மு க பொதுச் செயலாளர் வருகை தந்த போது கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான மூலம் கோயமுத்தூர் வருகை தந்த அதிமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திருப்பூரில் நடைபெறுகின்ற நிகழ்வுக்கு கலந்து கொள்வதற்காக சூலூர் வழியாக வருகை தந்தார் அவரை வரவேற்கும் பொருட்டு கோவை கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ் ஆர் ஏ செந்தில் தலைமையில் தொண்டர்கள் மஞ்சள்பூமலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர் முன்னதாக மாவட்ட செயலாளர் வருகை தந்த பொதுச்செயலாளருக்கு சால்வை அணிவித்து மலர் மாலை உடன் பூரண கும்ப மரியாதை செலுத்தி வரவேற்றார். திரண்டு இருந்த தொண்டர்கள் மலர்கள் தூவி கோசமிட்டு பட்டாசு வெடித்து ஜமாப் இசையுடன் வரவேற்றனர். திரண்டு இருந்த தொண்டர்களின் வரவேற்பினை ஏற்றுக்கொண்டு விடை பெற்று சென்றார் இந்நிகழ்வில் சூலூர் ஒன்றிய செயலாளர் நீ ரா சுப்பிரமணியம், சுல்தான்பேட்டை ஒன்றியம் ரவிக்குமார், சூலூர் நகர செயலாளர் சம்பத்,கிழக்கு மாவட்டம் மகளிர் அணி பிரேமகுமாரி, மாநில விவசாய அணி இணைச் செயலாளர் பாப்பம்பட்டி தாமோதரன், கண்ணம்பாளையம் செயலாளர் மூர்த்தி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி உதுமான், பட்டணம் பிஜேபி வைஸ் ஆறுமுகம் சூலூர் நகர துணை செயலாளர் சண்முகம் கண்ணம்பாளையம் அவைத்தலைவர் ராஜேந்திரன் மற்றும் ஏளமான தொண்டர்கள் கலந்து கொள்ளுங்கள்