ஒட்டலுக்கு சாப்பிடச் சென்ற 2 பேருக்கு கத்திக்குத்து

கோவை ஜூலை 7 கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர்கள் ஹேம்நாத் (வயது 23) பிரசன்னா (வயது 22) இவர்கள் இருவரும் அங்குள்ள இரும்பு கடையில் ஊழியர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். சம்பவத்தன்று இரவில் இவர்கள் இருவரும் அங்குள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர். சிக்கன் கொடுக்குமாறு கேட்டனர் .அதற்கு அங்கிருந்த ஊழியர்கள் சிக்கன் இல்லை என்று கூறியுள்ளனர். இதனால் அவர்கள் 2 பேரும் போதையில் ஓட்டலில் தகராறு செய்தனர் .இதில் ஆத்திரமடைந்த ஓட்டல் ஊழியர்கள் ஆதி, ஹரி, பிரவீன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஹேம்நாத், பிரசன்னா ஆகியோரை கத்தியால் குத்தினார்கள் .இதில் இவர்கள் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து ஒட்டல் ஊழியர்கள் ஹரி, ஆதி ஆகியோர கைது செய்தனர் பிரவீனை தேடி வருகிறார்கள். RAD