சென்னையில் மாணவி ஜனனி வர்ஷிதா பரதநாட்டியம் அரங்கேற்றம்.

போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.கோவை ஜூலை 8 தூத்துக்குடி பிரபல வர்த்தக பிரமுகர் டி.வி. பெருமாள் நாடார் -அம்மாள் தங்கம்,திசையன்விளைஆறுமுகசிங் (பி.எஸ். என். எல் .அதிகாரி ஒய்வு) -தங்கம் (அரசு பள்ளிஆசிரியை, ஒய்வு)ஆகியோரின் பேத்தியும்,அமெரிக்கா இன்ஜினியர் சிவ முருகன் -நிரஞ்சனா தம்பதியின் மகள் மாணவி ஜனனி வர்ஷிதா பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி,சென்னை டி.நகர்,வாணி மஹாலில் நடந்தது.விஜயா கருணாகரன் குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.முருக கவித்துவம்,மீனாட்சி நடனம், குறவஞ்சி நடனம்,உட்பட 7 நடனங்களை ஜனனி வர்ஷிதா சிறப்பாக ஆடிஅனைவரது பாராட்டுகளை பெற்றார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காவல்துறை ஐ.ஜி. பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ். கலந்து கொண்டு மாணவி ஜனனிக்கு கேடயம் பரிசு வழங்கிசிறப்புரையாற்றினார்.. ஐ .ஜி . பாலகிருஷ்ணனுக்குஆர் .பி. கருணாகரன் பொன்னாடை அணிவித்தார்.நாட்டிய வேதா நடன பள்ளிஇயக்குனர்,கலா மண்டலம் சிவியா ரவீந்திரன் 10 ஆண்டுகள்நடன பயிற்சி பெற்ற மாணவி ஜனனி வர்ஷிதாவுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கினார்.கலா மண்டலம் சிவியா ரவீந்திரனுக்கும்,,மற்றும் அவரது குழுவினருக்கும்,நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய கே.பிரவின்ஆகியோருக்கு சிவமுருகன் -நிரஞ்சனா, விஸ்வா ஆகியோர்பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்கள்.