எடப்பாடி பழனிச்சாமி வரவேற்பு விழாவில் பிளேடால் அறுத்து அ.தி.மு.க. நிர்வாகி உட்பட 2 பேரிடம் ரூ 2 லட்சம் திருட்டு

கோவை ஜூலை 8அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு சென்றார் .காலை 9 மணிக்கு அங்குள்ள பீமன் பகாசூரன் சன்னதி அருகே அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது இதில் நெல்லித்துறையைச் சேர்ந்த விவசாய ஆனந்தன் என்பவர் கலந்து கொண்டார்: அவர் ரூ 1 லட்சம் வைத்திருந்தார். அதை மர்ம ஆசாமிகள் நைசாக திருடிவிட்டனர்.இதே போல தனியார் மண்டபத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொள்ள தேக்கம்பட்டி ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர், காரமடை மேற்கு ஒன்றிய பொருளாளருமான தங்கராஜ் என்பவர் வந்திருந்தார் .அவரும் ரூ 1 லட்சம் வைத்திருந்தார். தங்கராஜ் மண்டபத்திற்கு வெளியில் நின்று கொண்டிருந்தபோது அவர் அணிந்த பேண்டின் இருபுறமும் உள்ள பாக்கெட்டுகளை யாரோபர்மா சாமிகள் பிளேடால் அறுத்து ரூ 1லட்சத்தை திருடி சென்று விட்டனர். கூட்டத்தை பயன்படுத்தி இந்த துணிகர திருட்டு நடந்துள்ளது. இது குறித்து மேட்டுப்பாளையம் காரமடை போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவிலில் அதிமுக நிர்வாகி உட்பட 2 பேரிடம் ரூ 2 லட்சம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.