வால்பாறையில் ஜாதி பெயரை சொல்லி திட்டி கொலைமிரட்டல் விடுத்ததாக திமுக நகரத் துணைச்செயலாளர் கைது

கோவை மாவட்டம் வால்பாறையில் திமுக பொறியாளர் அணி நிர்வாகி சத்தியமூர்த்தி என்பவரை கடந்த 5 ஆம் தேதியன்று பிளக்சில் படம் போட்ட விவகாரமாக தொலைபேசியில் தொடர்பு கொண்ட வால்பாறை திமுகவின் நகர துணைச்செயலாளர் சரவண பாண்டியன் வயது 54 என்பவர் தகாத கெட்ட வார்த்தைகளால் ஜாதி பெயரைச் சொல்லி திட்டிய தோடு கொலைமிரட்டலும் விடுத்ததாக வால்பாறை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் ஆனந்த குமாரிடம் புகாரளித்த சத்தியமூர்த்தி தொலைபேசியில் சரவண பாண்டியன் பேசிய ஆடியோ பதிவையும் அளித்து நடவடிக்கை எடுக்கக்கோரி யிருந்தார் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளர் புகாரில் குறிப்பிட்டிருந்த வைகள் உண்மையென உறுதிசெய்து சம்பந்தப்பட்ட நகர துணைச்செயலாளர் சரவண பாண்டியனை கைது செய்து அவர் மீது வன்கொடுமை உள்ளிட்ட சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் இச்சம்பவம் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது