கோவையில் 182 காவலர்களுக்கு பயிற்சி நிறைவு

கோவை ஜூலை 9 தமிழ்நாடு சீருடை தேர்வாணையம் சார்பில் தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை பயிற்சி காவலர்கள் 182 பேருக்கு கடந்த 7 மாதங்களாக கோவை போலீஸ் பயிற்சி பள்ளிக்கூடத்தில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதில் ஆயுதப் பயிற்சி, அணிவகுப்பு பயிற்சி,சட்டம் பயிற்சி. கராத்தே பயிற்சி கலவர தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்த பயிற்சிகள் முடிவடைந்து நேற்று நிறைவுவிழா நடைபெற்றது.இந்த விழாவில் ரயில்வே போலீஸ் டி.ஜி.பி. வன்னியபெருமாள் கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். சிறப்பான முறையில் பயிற்சி பெற்ற காவலர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கினார்.காவலர்களின் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன், போலீஸ் பயிற்சி பள்ளி முதல்வர் குணசேகரன், துணை முதல்வர் பழனி குமார் மற்றும் பயிற்சி நிறைவு செய்த காவலர்களின் குடும்பத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர் .