பெண் மாவோயிஸ்டு கோவை நீதிமன்றத்தில் ஆஜர்

கோவை ஜூலை 9 கேரள மாநிலம் வனப் பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதை தொடர்ந்து .இருமாநில போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். கடந்த 20 23ஆம் ஆண்டு ஆனைகட்டி வனப்பகுதியில் பதுங்கி இருந்த பெண் மாவோயிஸ்டு ஷோபா என்பவரை கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்தனர் .இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது .நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஷோபா நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். தொடர்ந்து வழக்கு விசாரணையை வருகிற 27-ஆம் தேதிக்கு நீதிபதி விஜயா தள்ளி வைத்து உத்தரவிட்டார்.நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.