வங்கி கடனை செலுத்த முடியாததால் தூக்கு போட்டு ஒருவர் தற்கொலை

கோவை ஜூலை 9கோவை கணபதி, மணியகாரம்பாளையம் ,பாரதியார் வீதியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 44) குடிப்பழக்கம் உடையவர். இவர் குடும்பச் செலவுக்காக கூட்டுறவு வங்கியில் ரூ 9லட்சம் கடன் வாங்கி இருந்தார். இதற்காக மாதம் ரூ 9 ஆயிரம் தவணை முறையில் பணம் செலுத்தி வந்தார். கடந்த 30-ஆம் தேதி தனது மகளின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடினார். இதனால் அவருக்கு மாத தொகையை வங்கிக்கு செலுத்த முடியவில்லை. மன அழுத்தத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று வீட்டில் எல்லோரும் தூங்கிய பிறகு மின்விசிறியில் சேலையை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி வித்யா தேவி சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார்.சப்- இன்ஸ்பெக்டர் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.