இருகூரில் வீட்டு மாடியில் சூதாட்டம்

7 பேர் கைது .கோவை ஜூலை 9 கோவை அருகே உள்ள இருகூர், சண்முகசுந்தரம் நகரில்வசிப்பவர் சண்முகம். இவரது வீட்டின் மொட்டை மாடியில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக சிங்காநல்லூர் போலீசுக்கு நேற்று மாலைதகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஒண்டிப்புதூர் இருளப்ப பாண்டியன் ( 37) பார்த்திபன் (33) புலியகுளம் சம்சுதீன் ( 62 ) இருகூர்,எல்.ஜி. நகர், தன கோவிந்தன் ( 46 ) ஒண்டிப்புதூர் சிவசாமி ( 47 ) நல்லேந்திரன் (30) உப்பிலிபாளையம் ராமானுஜம் நகர் பூபதி (48 )ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சீட்டுவிளையாட பயன்படுத்தப்பட்ட ரூ. 4,970 பணமும் மற்றும் சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. ,