வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம்

2 பெண் தரகர் கைது.கோவை ஜூலை 9 கோவை சரவணம்பட்டி அருகே உள்ள காந்தி மாநகரில் ஒரு வீட்டை மாதம் ரூ 15 ஆயிரத்துக்கு வாடகைக்கு எடுத்து விபசாரம் நடந்து வந்தது.இதுகுறித்து சரவணம்பட்டி போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் நேற்று இரவுஅங்கு திடீர் சோதனை நடத்தினார்.அப்போது அங்கு வெளி மாநிலஅழகிகளை அழைத்து வந்து கல்லூரி மாணவர்களிடம் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது. இது தொடர்பாக அதை நடத்தி வந்த மதுரை, ஆராப்பாளையம் கோபிநாத் (வயது 34) சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், பழையூரை சேர்ந்த அதியமான் ( வயது 27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்..இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.