கார் நிறுத்துவதில் மோதல் :டிரைவருக்கு கத்திக்குத்து

கோவை ஜூலை 9 பொள்ளாச்சியை சேர்ந்தவர் மணிவண்ணன் ( வயது 48 )டிரைவர். இவர் கோவை சித்ரா அருகே உள்ள பிருந்தாவன் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தனது கம்பெனி வாகனங்களை வழக்கமாக பிருந்தாவன் நகரில் உள்ள ஒரு பகுதியில் நிறுத்துவது வழக்கம். அதேபோன்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் சுபாஷ் சந்திர போஸ் (வயது 44) இவர் தற்போது அவினாசி ரோடு பூங்கா நகரில் வசித்து வருகிறார். இவரும் டிரைவர் ஆவார் .இவரும் அதே பகுதியில் வாகனங்களை பார்க்கிங் செய்வது வழக்கம். சம்பவத்தன்று வாகனத்தை பார்க்கிங் செய்யும்போது மணிவண்ணனுக்கும், சுபாஷ் சந்திர போஸ் க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது .அப்போது சுபாஷ் சந்திர போஸ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிவண்ணனின் வயிற்றில் குத்தினார். இதில் ரத்தம் கொட்டியது. பின்னர் அவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டுஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்துசுபாஷ் சந்திர போசை கைது செய்தனர். இவர் நீதிமன்றத்தில்ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.