கோவை மாவட்டம், அன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட சின்ன வேடம்பட்டி பகுதியைச் சேர்ந்த அன்பு மகன் அஜித் வீரன் (வயது25) என்பவரைஅன்னூர்போலீசார் கைது செய்தனர். இவர் மீது வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்தனர். மேற்படி நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் பரிந்துரை செய்தார்.
அப்பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர.பவன்குமார் க.கிரியப்பனவர், மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். மேற்படி உத்தரவின்படி வழிப்பறி வழக்கின் குற்றவாளியான அஜித்வீரன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.இதற்கான உத்தரவு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு நேற்று வழங்கப்பட்டது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0