கோவை ஜூலை 11தமிழ்நாட்டில்கள் இறக்கவும் .விற்பனை செய்யவும்,தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி கள் இறக்கி விற்பனை செய்பவர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.இந்த நிலையில் கோவை பேரூர்அருகே உள்ள காளம்பாளையத்தில் இருந்து நொய்யல் ஆற்றுக்குச் செல்லும் வழியில் உயர்மட்ட பாலம் உள்ளது. இதன் அருகே ஏராளமான பாக்கு, தென்னை மர, வாழை மரதோப்புக்கள் உள்ளன இங்கு ஒரு சில தென்னந்தோப்புகளில் காலை மற்றும் மதிய நேரத்தில் கள் இறக்கப்படுகிறது. அதை வாங்கி குடிக்க கள்பிரியர்கள் தென்னந்தோப்புகளை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். இதன் காரணமாக பேரூர் பகுதியில் தடையை மீறி கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக வார நாட்களை விட ஞாயிற்றுக்கிழமைகளில் கள் விற்பனை மிகவும் விறுவிறுப்பாக நடக்கிறது. இதனால் அன்று கள் வாங்க வருபவர்களின் கூட்டம் அலைமோதுகிறது. அவர்கள் காத்திருப்பதை தடுப்பதற்காக ஏற்கனவே மரத்தில் இருந்து இறக்கிய கள்ளை பாக்கெட்டுகளில் அடைத்து உடனுக்குடன் விற்பனை செய்து வருகின்றனர் .மேலும் சில தோட்டங்களில் சாவகாச அமர்ந்து கள் குடிக்க இட வசதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மரத்திலிருந்து கள்ளைஇறக்கி கொண்டு வந்ததும் ஆர்வமுடன் வாங்கி குடிப்பதை காண முடிகிறது. பிளாஸ்டிக் கப்புகளில் ஒரு லிட்டர் ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது மேலும் தோட்டத்து மரத்தில் இருந்து இறக்கி நேரடியாக கள் விற்பனை செய்வதால் அதை குடிக்க கள் பிரியர்கள் மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள். தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில் பேரூர் பகுதியில் கள் விற்பனை அமோகமாக நடைபெறுவது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மேலும் போலீசார் முறையாக ரோந்து செல்கிறார்களா?அல்லது போலீசாரின் ஆதரவுடன் கள்விற்பனை நடைபெறுகிறதா? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0