முதியவரிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது.

கோவை ஜூலை 11 கோவை உக்கடம் பைபாஸ் ரோட்டில் உள்ள ஜி. எம். நகரை சேர்ந்தவர்சாகுல் அமீது ( வயது 70) இவர் அரசு மருத்துவமனையில் மருந்து வாங்குவதற்காக ஒப்பணக்கார வீதி, குஜராத் கோவில் அருகே நடந்து சென்றார் அப்போது ஒரு ஆசாமி திடீரென்று இவரது சட்டை பையில் இருந்த செல்போனை திருடிவிட்டு தப்பி சென்று விட்டார். இது குறித்து சாகுல் அமீது உக்கடம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ரத்தினபுரி. பெரியார் நகரை சேர்ந்த விக்னேஷ் (வயது 30) என்பவரை கைது செய்தனர். செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.