மருத்துவமனை மேலாளருக்கு அடி – உதை .உரிமையாளர் மீது வழக்கு

கோவை ஜூலை 15 கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள திப்பம்பட்டி, கே. நாகூர் ரோட்டை சேர்ந்தவர் சக்திவேல் ( வயது 50 )இவர் பொள்ளாச்சி நியூ – ஸ்கீம் ரோட்டில் உள்ள தனியார்ஆர்த்தோ மருத்துவமனையில் மெடிக்கல் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் மருத்துவமனை பார்மசியில் நின்று கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்தஅந்த மருத்துவமனையின் உரிமையாளரான பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தைச் சேர்ந்த அருள்ராஜ் ( வயது 56 )மேனேஜர் சக்திவேலிடம் ஏன் வங்கி கணக்கு விவரங்களை இன்னும் முடிக்கவில்லை. என்று கேட்டு தகராறு செய்தாராம்.பின்னர் அவரை தகாத வார்த்தைகளால் பேசி கைகளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் சக்திவேல் காயமடைந்தார். சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் .இது குறித்து சக்திவேல் பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசில் புகார் செய்தார். போலீசார் மருத்துவமனை உரிமையாளர் அருள்ராஜ் மீது 3 பிரிவின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.