பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் கைது

கோவை ஜூலை15 புதுக்கோட்டை மாவட்டம் ,ஆலங்குடி பக்கம் உள்ள கருங்காலிக் கோட்டையைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் கோபால் (வயது 28) இவர் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில்பெரிய நாயக்கன்பாளையம் போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்குதடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கோபால் கைது செய்யப்பட்டார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.