மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தூக்கு போட்டு தற்கொலை

கோவைஜூலை15 கோவை குறிச்சி ,காந்தி நகர், எம். ஜி. ஆர் .நகரில் உள்ள சிலோன் காலணியைசேர்ந்தவர் காளியப்பன். இவரது மகன்மனோஜ் குமார் ( வயது 30) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாகஇவரது மனைவி பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதிலிருந்து மனோஜ்குமார் மன அழுத்தத்துடன் காணப்பட்டார் .இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் மின்விசிறியில் சேலையைக் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.,இது குறித்து அவரது தாயார் முத்துலட்சுமி சுந்தராபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கன்னையன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.