36 போதை மாத்திரைகளுடன் வட மாநில வாலிபர் கைது

கோவை ஜூலை 15 கோவை ஆர். எஸ். புரம். சப்- இன்ஸ்பெக்டர் முத்து , சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் கருப்புசாமி ஆகியோர் நேற்று மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள வடகோவை மேம்பாலத்துக்கு அடியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேக படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 36 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன .இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார் விசாரணையில் அவர் நாகாலந்து மாநிலத்தைச் சேர்ந்த லென்ஜங்கம் (வயது 30) என்பது தெரிய வந்தது .இவர் தற்போது சிவானந்த காலனி,அண்ணா நகரில் தங்கி இருந்து போதை மாத்திரைகளை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.