பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா சூலூரில் திரு உருவப் படத்துக்கு மரியாதை

கோயமுத்தூர் மாவட்டம் சூலூரில் கோவை நாடார் மகாஜன சங்கம், கோவை மாவட்ட வர்த்தக சங்கம் சூலூர் கிளை சார்பில் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா சூலூர் நெல்லை காசி எட்வின் ஏற்பாட்டில் சூலூர் புதிய பேருந்து நிலையம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜரை திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அவர் காலத்தில் தமிழ்நாடு கண்ட வளர்ச்சிகளை எடுத்துக் கூறி பொதுமக்களுக்கு மற்றும் பேருந்து பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், கோவை கிழக்கு மாவட்ட வர்த்தக சங்கத் தலைவர் முத்துப்பாண்டி முன்னிலையில் நடைபெற்ற விழாவில் 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கொண்டாடினர்