ஆடி வெள்ளி கோவில்களில் பெண்களின்கூட்டம் அலைமோதல்.

கோவை ஜூலை 18 இன்று ஆடி மாதம் முதல் வெள்ளியை யொட்டி கோவில்களில் பெண் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.கோவையில் உள்ள அருள்மிகு. கோனியம்மன்,தண்டு மாரியம்மன்,காமாட்சி அம்மன்,மாகாளியம்மன்,மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன்,ஆனைமலை மாசாணியம்மன் கோவில்களில் இன்று அதிகாலை 4 மணிக்கே பக்தர்கள் திரண்டனர்.நீண்ட கியூ வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.அன்னதானமும் வழங்கப்பட்டது.இதை யொட்டி கோவில்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.