பைக் மீது அரசு பஸ் மோதி வாலிபர் சாவு

கோவை ஜூலை 18 கோவை ரத்தினபுரி ஓஸ்மின் நகரை சேர்ந்தவர் பிரேம் குமார். இவரது மகன் பெஞ்சமின் ஸ்டீவ் ( வயது 19) இவர் நேற்று காந்திபுரம் பாரதியார் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலைத்தடுமாறு ரோட்டில் விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் இவர் மீது மோதியது .இதில் பெஞ்சமின் ஸ்டீவ்அதே இடத்தில் உடல் நசுங்கி இறந்தார். இது குறித்து அவரது தாயார் ஹெப்சிபா பியூலா கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவுபோலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜேஷ் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.