தாய் -மகன் திடீர் மாயம்!!

ஜூலை 18 கோவை புலியகுளம், கல்லுக்குழியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி முருகம்மாள் ( வயது 60) மகன் சிங்கமுத்து ( வயது 30) இவர்கள் இருவரும் கடந்த 15 ‘ஆம் தேதி வீட்டில் இருந்து திடீரென்று மாயமாகிவிட்டனர். இதுகுறித்து முருகம்மாளின் மற்றொரு மகன் மகேந்திரன் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.