உணவில் விஷம் கலந்து கொடுத்து 5 நாய் – 2பூனை சாகடிப்பு.

கோவை ஜூலை 19 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பக்கம் உள்ள உக்கன் நகர், பால குருநாதர் கோவில் அருகே நேற்று 5 நாய்களும், 2பூனைகளும் இறந்து கிடந்தன.இதுகுறித்து சிக்க தாசம்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி மணிகண்டன் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் சம்பவ இடத்துக்குசென்று விசாரணை நடத்தினார்.அந்த மிருகங்களுக்கு யாரோ உணவில் விஷம் கலந்து கொடுத்து கொன்று சாக்கு முட்டையில் அடைத்து இங்கு வீசியிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.