கோவை 19 கோவை மாவட்டம் ,நெகமம் புது பஸ் நிலையம் அருகே நெகமம் சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் நேற்று மாலை ரோந்து சுற்றி வந்தார் அப்போது அங்கு தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததாக கிணத்துக்கடவு, குப்பனூர் புதூரை சேர்ந்த மாகாளிசாமி ( வயது 81 ) கைது செய்யப்பட்டார் இவரிடமிருந்து 120 கேரள மாநில லாட்டரி டிக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல பொள்ளாச்சி நெல்லூர் பிரிவுசோதனை சாவடி அருகே லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததாக திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் செல்லப்பன் (வயது 63 )கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 40 லாட்டரி டிக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது. அதே பகுதியில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததாக பொள்ளாச்சி, அழகாபுரி வீதியைசேர்ந்த வெங்கடேஷ் (வயது 55 )கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து 20 லாட்டரி டிக்கெட்டுகள்பறிமுதல் செய்யப்பட்டது.கோவை அருகே உள்ள தடாகம் பஸ் ஸ்டாப்பில் கேரள மாநில லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததாக சின்ன தடாகம்,பழைய வங்கி ரோட்டை சேர்ந்த செல்வராஜ் என்ற பூரி செல்வம் (வயது 65) கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து 360 லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0