பட்டப் பகலில் தொழிலாளியை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த கொள்ளையன் கைது

கோவை ஜூலை 19 கோவை காந்தி பார்க், மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 45) கூலிதொழிலாளி. இவர் நேற்று காலை 10 மணிக்கு அங்குள்ள கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இவரை ஒரு வாலிபர் வழிமறித்து மது குடிக்க பணம் கேட்டார் .அவர் கொடுக்க மறுத்ததால் கத்தியை காட்டி மிரட்டி சட்டை பையில் இருந்து 500 ரூபாயை கொள்ளையடித்தார். இதை தடுத்த அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி சென்று விட்டார். இது குறித்து முருகேசன் வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்கு பதிவு செய்து காந்தி பார்க், தடாகம் ரோட்டை சேர்ந்த ஆகாஷ் (வயது 21) என்பவரை கைது செய்தார். இவரிடம் விசாரணை நடந்து வருகிறது.