கஞ்சா -போதை மாத்திரைகளுடன் 3 பேர் கைது

கோவை ஜூலை 19 கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர் ஜெசீஸ் உதயராஜ் ஆகியோர் நேற்று சத்தி ரோடு,சாஸ்திரி நகர், புற்றுக் கண்மாரியம்மன் கோவில் வீதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி 3 பேர் நின்று கொண்டிருந்தனர்.அவர்களை பிடித்து சோதனை செய்த போது 1கிலோ 300 கிராம் கஞ்சா, 32 கிராம் “மெத்தப்பட்ட மின் ” என்ற போதை பொருள் மற்றும் ரூ. 4 ஆயிரம் பணமும்இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக நீலகிரி மாவட்டம் கூடலூர் ,நியூ ஹோப், ஹோம் வேலியைச் சேர்ந்த கோவிந்தராஜ் சேதுபதி மகன் யோகி சேதுபதி (வயது 21 )கூடலூர் செவிடிபட்டி,காளம் புழா ரோடு பஷீர் அப்துல்லா (வயது 23) ராஜகோபாலபுரம் அபிஷேக் ( வயது 21) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இவர்களிடமிருந்த எலக்ட்ரானிக் எடை இயந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்.படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.