வால்பாறை இந்து அன்னையர் முன்னணி சார்பாக 300 தீர்த்தக் குடங்கள் எடுத்து அம்மனுக்கு மஞ்சள் நீர் அபிஷேகம் நடைபெறுகிறது

கோவை தெற்கு மாவட்டம் வால்பாறை இந்து அன்னையர் முன்னணி சார்பாக ஆடிமாத முதல் வாரமான நேற்று வால்பாறையில் உள்ள காமாட்சி அம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு மஞ்சள் நீர் அபிஷேகம் நடைபெற்றது முன்னதாக நடுமலை ஆற்றிலிருந்து மஞ்சள் அபிஷேக 300 தீர்த்தக் குடங்கள் எடுத்து நகர் வழியாக ஊர்வலமாகச் சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்து பக்தி பரவசத்தோடு வழிபட்டனர் வால்பாறை இந்து அன்னையர் முன்னணியின் மாவட்ட செயலாளர் எம்.விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்து அன்னையர் முன்னணியின் நகர தலைவர் ஸ்ரீ தேவி, நகர துணைத்தலைவர் எம்.இரஞ்சிதா, இந்து முன்னணி தலைவர் சதீஷ் மற்றும் நகர, ஒன்றிய நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்