கோவை ஜூலை 21 முதல் அமைச்சர் மு .க . ஸ்டாலின் கோவை திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாளை 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு தி.மு.க. நிர்வாகிகள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுக்கிறார்கள். பின்னர் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கார் மூலம் திருப்பூர் மாவட்டம் செல்கிறார். அங்கு பல்லடம் மற்றும் உடுமலையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு பெறுகிறார் .இதில் அமைச்சர்கள், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர் .23 -ஆம் தேதி (புதன்கிழமை) அமைச்சர் மு. .க . ஸ்டாலின் பொள்ளாச்சி செல்கிறார் .அங்கு பொள்ளாச்சி – உடுமலை ரோடு நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலக வளாகத்தில் பரம்பிக்குளம் -ஆழியார் பாசனத் திட்டம் நிறைவேற காரணமாக இருந்த பெருந்தலைவர் காமராஜர், சுப்பிரமணியம், மகாலிங்கம் ஆகிய தலைவர்களின் உருவ சிலைகளை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதில் அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர் பவன் குமார், மற்றும் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இது யடுத்து கோவை வரும் அவர் தனியார் ஓட்டலில் நடைபெறும் கோவைக்கான மாஸ்டர் பிளான் திட்டம் குறித்து அதிகாரிகள், பொதுமக்கள், தொழில்துறையினர் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார் .சமீபத்தில் வெளியிடப்பட்ட கோவை மாஸ்டர் பிளான் 2041 குறித்து பொதுமக்களின் கருத்துக்களை முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கேட்டறிய உள்ளார். முதல் அமைச்சர் கோவை வருகையை முன்னிட்டு மாநகர் மற்றும் ஊரக பகுதிகளில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி செந்தில் குமார்மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர்,ஆகியோர் மேற்பார்வையில்,,பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0