கோவையில் புரோட்டா மாஸ்டர் அடித்துக் கொலை

நண்பர் வெறிச் செயல்.கோவை ஜூலை 21 திண்டுக்கல் மாவட்டம் ,நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். அவரது மகன் நவீன் ( வயது 40) உக்கடம் புல்லுக் காடு பகுதியில் தங்கியிருந்து அதே பகுதியில் உள்ள புரோட்டா கடையில் வேலை செய்து வந்தார் .இவருடன் இவரது நண்பரான தயாநிதி என்பவரும் தங்கி இருந்தார்.நேற்று இரவு இவர்களிடையே தகராறு ஏற்பட்டது இதில் ஆத்திரமடைந்த தயாநிதி “கேஸ் பர்னரால் ” நவீன் தலையில் சரமாரியாக அடித்தார்.இதில் படுகாயம் அடைந்த நவீன்அதே இடத்தில்ரத்த வெள்ளத்தில் பிணமானார் .பின்னர் அங்கிருந்து தயாநிதி தப்பி ஓடி விட்டார்.இன்று காலையில் நவீன் பிணமாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இது பற்றி தகவல் அறிந்ததும் உக்கடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பணத்தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து கொலை வழக்கு பதிவு செய்து தயாநிதியை தேடி வருகிறார்கள்.இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.