டாஸ்மாக் பாரில் பதுக்கி வைத்த 154 மது பாட்டில்கள் பறிமுதல் . உரிமையாளர் – மேனேஜர் மீது வழக்கு

கோவை ஜூலை 21 கோவை பீளமேடு அவினாசி ரோட்டில் உள்ள ஒரு பாரில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பீளமேடு போலீசுக்குதகவல் வந்தது .இதையடுத்து இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் நேற்றிரவு அந்த பாரில் திடீர்சோதனை நடத்தினார் அப்போது சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த154 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன .இது தொடர்பாக பார் உரிமையாளர் சிவகுமார், மேனேஜர் விக்னேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.