வால்பாறையில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி

கோவை மாவட்டம் வால்பாறையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் நேற்று முன்தினம் காமராஜர் நகர் பகுதியில் வசிக்கும் சுப்பிரமணியன் என்பவரின் வீட்டின் பின்புறமுள்ள சுவர் இடிந்து விழுந்தது அதேபோல காந்திநகர் பகுதியில் வசிக்கும் மணி என்பவரின் வீட்டின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது இச்சம்பவம் அறிந்து அப்பகுதிக்கு சென்ற வால்பாறை நகராட்சி நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம், மற்றும் நகர் மன்ற துணைத் தலைவரும் அப்பகுதி நகர் மன்ற உறுப்பினருமான த.ம.ச.செந்தில்குமார் ஆகியோர் அப்பகுதியை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உணவு பொருட்களை நிவாரண உதவியாக வழங்கினர்