காரில் வந்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி நகை – பணம் கொள்ளை

3பேர் கைது.கோவை ஜூலை 22 கோவை கவுண்டம்பாளையம் டி.வி.எஸ். நகர் பகுதியைச் சேர்ந்தவர் 46 வயது பெண். இவர் வீட்டில் தனியாக இருந்த போது காரில் வந்த 4 பேர் அந்த பெண்ணை தாக்கி 2 பவுன் தங்க நகைகள் ரூ.10 ஆயிரம்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு அவரிடம் இருந்து ஏ.டி.எம். கார்டையும் பறித்து வங்கி கணக்கில் இருந்த ரூ20 ஆயிரத்தையும் கொள்ளையடித்து சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் கவுண்டம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் .அத்துடன் அந்த பெண்ணிடம் இருந்து நகை – பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை பிடிக்கபோலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில்தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தினர் .அதில் அந்த பெண்ணிடம் நகை – பணம் கொள்ளையடித்துச் சென்றது குனியமுத்தூரை சேர்ந்த சதாம் உசேன் ( வயது 35 )பிரதான் ( வயது 28) ராகுல் ( வயது 22 )என்பது தெரியவந்தது .இதை யடுத்து போலீசார் அந்த 3 பேரையும் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2பவுன் நகை ,ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தலைமறைவான மற்றொரு நபரை போலீசார் தேடி வருகிறார்கள். இதில் கைதான சதாம் உசேன் மீது 6 குற்றவழக்குகளும், பிரதான் மீது 7 குற்ற வழக்குகளும் ,ராகுல் மீது ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.