பிறந்து 49நாட்களான பெண் குழந்தை மர்ம சாவு

கோவை ஜூலை 22 தேனி மாவட்டம், பழனி செட்டி பட்டியைச் சேர்ந்தவர் முருகன் ( வயது 48) இவர் சூலூர், ரங்கநாதபுரம்,செங்காளியப்பன்நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார் இவரதுமனைவிக்கு கடந்த 49 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.. அந்த குழந்தைக்குநீரழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த குழந்தைக்கு திடீர் உடல் நல குறைவுஏற்பட்டது.இதை யடுத்து சூலூர்அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர் வழியில்குழந்தை இறந்து விட்டது. இது குறித்து தந்தை முருகன் சூலூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.