இன்ஜினியர் -பட்டதாரியிடம் ரு21. லட்சம் ஆன்லைன் மோசடி

கோவை ஜூன் 24 கோவை நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்தவர் பட்டீஸ் பிரவீன் (வயது 40) கட்டிட கட்டுமான ஆலோசகர் . இவருக்கு வாட்ஸ் அப் மூலம் ஒரு தகவல் வந்தது .அதில் ” மேக்கிங் மனி”என்ற செயலி மூலம் முதலீடு செய்யுமாறும்,இதில் முதலீடு செய்தால் பல கோடி சம்பாதிக்கலாம் என்று குறிப்பிடபட்டிருந்தது. இதனை உண்மை என்று நம்பிய பட்டிஸ் பிரவீன் 11 தவணைகளில் மொத்தம் ரூ. 13 லட்சத்து 70 ஆயிரத்தை முதலீடு செய்தார்.அதில் குறிப்பிடப்பட்டிருந்தது போலபல கோடி லாப பணம் எதுவும் கிடைக்கவில்லை.இது மோசடி என்று தெரிந்த பின் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது பணத்தை கொடுக்காமல் ஆன்லைன் கும்பல் ஏமாற்றி விட்டனர். இதே போல கோவை வீரகேரளத்தைச் சேர்ந்தவர் சபரி வாசன். பி.காம். பட்டதாரி இவர் ” யூ டியூப் ” பார்த்துக் கொண்டிருந்தபோது அதில் ஒரு தகவல் வந்தது. ஆன்லைன் மூலம் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக தெரிவித்திருந்தது. இதை நம்பி இவர் ரூ. 7லட்சத்து 70 ஆயிரம்முதலீடு செய்தார் . லாபம் எதுவும் கிடைக்கவில்லை.ஆனால் பணத்தை திரும்ப கொடுக்காமல் ஏமாற்றிவிட்டனர். இதுகுறித்து கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.