ஆம்னி பஸ்சில் பயணம் செய்தவரிடம் 7 கிலோ கஞ்சா பறிமுதல் .

கோவை ஜூலை 24 கோவை வாளையார் சோதனை சாவடியில் நேற்று கலால்துறை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர். அப்போது பெங்களூரில் இருந்துகோவை வழியாக கொச்சி செல்லும் ஆம்னி பஸ்சில் திடீர் சோதனை நடத்தினார்கள். அந்த பஸ்சில் சந்தேகத்துக்கிடமாக இருந்த கேரள மாநிலம், மலப்புரத்தை சேர்ந்த கிருஷ்ணன் குட்டி மகன் அருண் ( வயது 28) என்பவரை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் 7 கிலோ உலர் கஞ்சா இருப்பதும், அதை பெங்களூரில் இருந்து கடத்தி வந்ததும் தெரிய வந்தது.இந்த நிலையில் தப்பி ஓட முயன்ற அருணை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.8 லட்சம் இருக்கும். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது