போலீசாக நடித்து மளிகை கடையில் ரூ.40, ஆயிரம்திருடியவர் கைது.

கோவை ஜூலை 25 மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் மைதிலி.இவர் அன்னூர் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார் .இவரது கடைக்கு நேற்று ஒருவர் வந்தார் .அவர் தன்னை போலீஸ் என்று அறிமுக படுத்திக் கொண்டார். உங்கள் கடையில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்துள்ளது. எனவே கடையை சோதனை செய்ய வேண்டும் என்று கூறினார். பின்னர் கடைக்குள் புகுந்து சோதனை செய்வது போல நடித்து அங்கிருந்த ரூ 40 ஆயிரத்தை நைசாக திருடிவிட்டு சென்றுவிட்டார். இது குறித்து மைதிலி அன்னூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் போலீசாக நடித்து படம் திருடியவர் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் சேர்ந்த மணிகண்டன் ( வயது 40 )என்பது தெரியவந்தது .அவரை போலீசார்கைது செய்தனர்.