இருகூரில் பணம் வைத்துமெகா சூதாட்டம். 10 பேர் கைது!!

கோவை ஜூலை 28 கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள இருகூரில் தேவர் சிலை அருகே பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக சிங்காநல்லூர் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக இருகூரைசேர்ந்த சக்திவேல் ( 30) ஹரிஷ் குமார் ( 41 ) ராஜகோபாலன் ( 71 ) ராஜமாணிக்கம் ( 44 ) ராஜன் (33) ஜெயக்குமார் (30) ஒண்டிப்புதூர் கார்த்திகேயன் (43)தண்டபாணி ( 55 ) நாகராஜன் ( 45 ) ராதாகிருஷ்ணன் ( 61),ஆகியோர் கைது செய்யப்பட்டனர் சீட்டு விளையாட பயன்படுத்தப்பட்ட ரூ 21,540 பணமும்,சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.