பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கிருந்த கும்பல் கைது

கோவை ஆகஸ்ட் 1 கோவை சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், சப் இன்ஸ்பெக்டர் செல்வி ஆகியோர் நேற்று சரவணம்பட்டி சகாரா சிட்டி அருகே ரோந்து சுற்றி வந்தனர் ,அப்போது அங்குள்ள மறைவான இடத்தில் ஒரு கும்பல் பதுங்கி இருந்தது தெரியவந்தது. அவர்களை மடக்கிபிடித்து சோதனை செய்தனர். அவரிடம் கத்தி, அரிவாள், இரும்பு பைப் போன்ற ஆயுதங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் கொள்ளை அடிக்கும் நோக்கத்துடன் அங்கு பதுங்கி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது .இதை யடுத்து அந்த கொள்ளை கும்பலை சேர்ந்த 3பேர் கைது செய்யப்பட்டனர்.. விசாரணையில் அவர்கள் சரவணம்பட்டி சிவானந்தபுரம் சௌடாம்பிகா நகரை சேர்ந்த வீரபாண்டி ( வயது 24 )இடிகரை, கோவிந்த நாயக்கன்பாளையம், எம்.ஜி.ஆர் .நகரை சேர்ந்த குட்டு என்ற ரித்திக் (வயது 24)சரவணம்பட்டி விநாயகபுரம், கவுசிக் ( வயது 21 )என்பது தெரியவந்தது .சிவா என்ற பேபி,கமலேஷ் ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர். இவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.