திருமண ஏக்கத்தில் தண்ணீர் தொட்டியில் குதித்து வாலிபர் தற்கொலை

கோவை ஆகஸ்ட் 1 கோவை சவுரிபாளையம், கருணாநிதி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் . இவரது மகன் கார்த்திக் (வயது 33) இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் மன அழுத்தத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று இவரது தாயும், தந்தையும் வேலைக்கு சென்று விட்டனர் .திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் மகனை காணவில்லை .தேடி பார்த்தும் கிடைக்கவில்லை இது குறித்து அந்த வீட்டின் உரிமையாளரிடம் தகவல் சொன்னார்கள். அவர் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது கார்த்திக் வீட்டின்உள்ள தண்ணீர் டாங்கில் குதித்து தற்கொலை செய்வது தெரியவந்தது.இது குறித்து பீளமேடு போலீசில் கார்த்திக் தாயார் ஹேமலதா புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுதொட்டிக்குள் பிணமாக கிடந்த கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.