பஸ் ஸ்டாப்பில் மனைவிக்கு சரமாரி கத்திக்குத்து

கணவர் கைது.கோவை ஆகஸ்ட் 2 தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள கமல நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி ( வயது 49) கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சரசு ( வயது 50 )இவர்களுக்கு பரதன் (வயது 29) என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் கோவை சேரன்மாநகரில் வீடு எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்தனர். பழனி குடிப்பழக்கம் உடையவர். தினமும்ம் மது குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்தார்.. எனவே அவரை மனைவி மற்றும் குடும்பத்தினர் கண்டித்தனர் .ஆனால் அதை அவர் கேட்க வில்லை .இதன் காரணமாக பழனியை அவரது மனைவி சரசு வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. இதனால் சரசு மீது பழனிக்கு ஆத்திரம் ஏற்பட்டது .நேற்று சரசு வேலைக்கு செல்வதற்காக சேரன்மாநகர் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த பழனி, சரசுவிடம் தகரரறு செய்தார் மேலும் ஆத்திரமடைந்த அவர் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவி சரஸ்வதி சரமாரியாரியாக குத்தினார் .இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது . சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பீளமேடு போலீசில்புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் வழக்கு பதிவு செய்து கணவர் பழனியை கைது செய்தார்.பஸ் ஸ்டாப்பில் மனைவியை கணவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.